Search This Blog
Sunday, January 29, 2023
தினம் சில சிந்தனைகள்
தேவையில்லாமல் எதிர்ப்பதையும்
தேவைக்கு அதிகமாக எதிர் பார்ப்பதையும்
குறைத்துக் கொண்டாலே மகிழ்ச்சி என்றும் நம் வசமே....!!
பிறருக்கு தொல்லை கொடுக்காமல் வாழ்ந்தாலே போதும்...
கோயில் பரிகாரம் பூசை என்று அலைந்து திரிய வேண்டிய அவசியம் இல்லை...!!
வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்தான்... அதற்காக
நம் தரத்தை குறைத்துக் கொள்வது தராதரம் அற்றவராய் நம்மை மாற்றி விடும்....!!
நாம் பெற்றதை மட்டும் பொத்தி பொத்தி வளர்த்தா போதாது...
நம்மை பெற்றவர்களையும் பொத்திப் பொத்திப் பாதுகாக்கணும்...!!
வாழ்க்கையை கொடு வசதியைக் கொடு என்று வேண்டுகிற மாதிரி...
நல்ல புத்தியைக் கொடு
நல்ல மனசக் கொடு என்று யாரும் வேண்டுவதில்லை...!!
முன்னோர்கள் எல்லாம் தானும் வாழ்ந்து தலைமுறைக்கும் வழிகாட்டினார்கள்....
ஆனால் இன்றைய பின்னோர்கள் தான்மட்டுமே வாழ்ந்தால் போதுமென நினைக்கிறார்கள்...!!
நாய் நன்றியுள்ளது என்பதும் நாம்தான்... நன்றி கெட்டவரை நாயுடன் ஒப்பிடுவதும் நாம்தான்.... முரண்பாடு நம்மிடம்தான்... நாயிடமும் நன்றியிடமும் இல்லை...!!
வீட்டு மருத்துவம்.
சப்பாத்திக்கள்ளி பழத்தை சாப்பிட்டு வந்தால் குரல் வளை, பித்தப்பை ,மலக்குடல் , சார்ந்த அனைத்து குறைபாடுகளையும் போக்கும்.
பொது தகவல்.
உலகின் மிக விலை உயர்ந்த திரவப்பொருள் தேளின் விஷம் ஒரு லிட்டரின் விலை 68 கோடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment