Labels

Sunday, September 07, 2025

நான்காவது தொழிற் புரட்சி

கோடாக் நிறுவனம் நினைவிருக்கிறதா? 1997 ஆம் ஆண்டில், கோடாக்கில் சுமார் 1,60,000 பணியாளர்கள் இருந்தனர். உலகின் 85% புகைப்படம் எடுத்தல் கோடாக் கேமராக்கள் மூலம் செய்யப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக மொபைல் கேமராக்கள் அதிகரித்து வருவதால், கோடாக் கேமரா நிறுவனம் சந்தையை விட்டே போய்விட்டது. கோடாக் நிறுவனம் முற்றிலும் திவாலானது மற்றும் அதன் ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.


அதே நேரத்தில் மேலும் பல பிரபல நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள போராட வேண்டியதாயிற்று.

எச்எம்டி (கடிகாரம்)

பஜாஜ் (ஸ்கூட்டர்)

டயனோரா (டிவி)

மர்பி (ரேடியோ)

நோக்கியா (மொபைல்)

ராஜ்தூத் (பைக்)

அம்பாசிடர் (கார்)

மேலே உள்ள எந்த நிறுவனமும் மோசமான தரத்தைக் கொண்டிருக்க வில்லை. இந்த நிறுவனங்கள் ஏன் தாக்குப் பிடிக்க முடியவில்லை? ஏனென்றால் காலப்போக்கில் அவர்களால் தங்களை எதிர் காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியவில்லை.

தற்போதைய தருணத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் உலகம் எவ்வளவு மாறக்கூடும் என்று நீங்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டீர்கள்! இன்றைய 70%-90% வேலை வாய்ப்புகள் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக போய் விடும். நாம் மெதுவாக "நான்காவது தொழில் புரட்சி" யுகத்தில் நுழைகிறோம்.

இன்றைய பிரபலமான நிறுவனங்களைப் பாருங்கள்-

UBER என்பது ஒரு மென்பொருள் பெயர். அவர்களிடம் சொந்தமாக கார்கள் இல்லை. இன்று உலகின் மிகப்பெரிய வாடகை டாக்ஸி நிறுவனம் UBER ஆகும்.

Airbnb இன்று உலகின் மிகப்பெரிய ஹோட்டல் நிறுவனமாகும். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அவர்களுக்கு உலகில் சொந்தமாக ஒரு ஹோட்டல் கூட இல்லை.

இதேபோல், Paytm, Ola Cab, Oyo போன்ற எண்ணற்ற நிறுவனங்களின் உதாரணங்களைக் கொடுக்கலாம்.

இன்று அமெரிக்காவில் புதிய வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லை, ஏனென்றால் IBM Watson என்ற சட்ட மென்பொருள் மூலம் எந்தப் புதிய வழக்கறிஞரையும் விட மிகச் சிறப்பாக வாதிட முடியும். இதனால், கிட்டத்தட்ட 90% அமெரிக்க வழக்கறிஞர்களுக்கு அடுத்த 10 ஆண்டுகளில் எந்த வேலையும் இருக்காது. மீதமுள்ளது 10% நிபுணர்கள் மட்டுமே இருப்பார்கள்.

புதிய டாக்டர்களுக்கும் வேலை இல்லாமல் போகும். வாட்சன் மென்பொருள் மூலம் புற்று நோய் மற்றும் பிற நோய்களை மருத்துவர்களை விட 4 மடங்கு துல்லியமாக கண்டறிய முடியும். கணினி நுண்ணறிவு 2030 க்குள் மனித நுண்ணறிவை மிஞ்சும்.

இன்றைய கார்களில் 90% அடுத்த 20 ஆண்டுகளில் சாலைகளில் காணாமல் போய் விடும். மீதமுள்ளவைகள் மின்சாரம் அல்லது ஹைபிரிட் கார்கள் மூலம் இயங்கும். சாலைகள் மெதுவாக காலியாகிவிடும். பெட்ரோல் நுகர்வு குறைந்து, எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் மெல்ல மெல்ல திவாலாகிவிடும்.

கார் வேண்டும் என்றால் உபெர் போன்ற மென்பொருளிடம் தான் கேட்க வேண்டும். மேலும் நீங்கள் கார் கேட்டவுடனேயே முற்றிலும் டிரைவர் இல்லாத கார் வந்து உங்கள் வீட்டு வாசலில் நிற்கும். நீங்கள் ஒரே காரில் பலருடன் பயணம் செய்தால், ஒரு நபருக்கு ஒரு காரின் வாடகை பைக்கை விட குறைவாக இருக்கும்.

ஓட்டுநர் இல்லாமல் வாகனம் ஓட்டினால் விபத்துகளின் எண்ணிக்கை 99% குறையும். இதனால்தான் கார் இன்சூரன்ஸ் நிறுத்தப்படும் மற்றும் கார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வேலை இல்லாமல் போகும்.

உலகில் கார் ஓட்டுனர்கள் இனி பிழைக்க வழி இருக்காது. 90% வாகனங்கள் சாலையில் காணாமல் போகும் போது, ​​போக்குவரத்து போலீசார் மற்றும் பார்க்கிங் பணியாளர்கள் தேவைப்பட மாட்டார்கள்.

யோசித்துப் பாருங்கள், 10 ஆண்டுகளுக்கு முன்பு கூட தெருக்களில் STD பூத்கள் இருந்தன. நாட்டில் மொபைல் புரட்சி வந்த பிறகு இந்த STD பூத்கள் அனைத்தும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டன. பிழைத்தவர்கள் மொபைல் ரீசார்ஜ் கடைகளுக்கு மாறிவிட்டனர். மொபைல் ரீசார்ஜில் மீண்டும் ஆன்லைன் புரட்சி. மக்கள் வீட்டில் இருந்தபடியே தங்கள் மொபைலை ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தொடங்கினர். இந்த ரீசார்ஜ் கடைகள் மீண்டும் வேறு வியாபாரத்துக்கு மாற வேண்டியிருந்தது. இப்போது இக் கடைகள் மொபைல் போன்கள் வாங்கவும் விற்கவும் பழுதுபார்க்கவும் மட்டுமே செய்கின்றன . ஆனால் இதுவும் மிக விரைவில் மாறும். அமேசான், பிளிப்கார்ட் போன்றவற்றிலிருந்து நேரடியாக மொபைல் போன் விற்பனை அதிகரித்து வருகிறது.

பணத்திற்கான அர்த்தம் மாறி வருகிறுகிறது. முன்பெல்லாம் ரொக்கம் கையில் இருந்தது, ஆனால் இன்றைய காலத்தில் அது "பிளாஸ்டிக் பணம்" ஆகிவிட்டது. கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் புழக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு இருந்தன. இப்போது அதுவும் மாறி மொபைல் வாலட் காலம் வரப்போகிறது. Paytm Gpay இன் வளர்ந்து வரும் சந்தை, மொபைல் பணத்தின் காலமாக ஆகிவிட்டது.

காலத்துக்கு ஏற்ப ஒத்துப்போக முடியாதவர்களை, காலம் இந்த உலகத்திலிருந்து நீக்குகிறது. எனவே காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருங்கள்.

காலத்திற்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்ளுங்கள். காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து முன்னேறுங்கள்.

 With Regards.,    
                                                                                                          

Dr Anthony Rahul Golden S 
M.Com., M.Phil., NET., 
Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A.,  PGDBA., 
Asst. Professor of Commerce.Loyola College (Autonomous), Chennai - 34
Mobile No- 91+9176313545

https://yesrahul.blogspot.com/

https://orcid.org/0000-0001-8071-4801

https://www.researchgate.net/profile/Anthony-Golden-S 
https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ
Anthony Rahul Golden, S. - Author details - Scopus Preview