This is for learning & updating yourself These days, learning is very important. So keep on learning and enjoy leaning a lot. Learning brings Happy and Achievement. Anybody wishes to share your ideas, information and so on, send it to racommerce5@gmail.com. Kindly follow by giving your mail id at the follow box for getting the updates properly. Sharing Information is our SERVICE. Thank you. Happy to Share by Rahul Gold,
Labels
Sunday, July 02, 2023
பெருந்தலைவர் காமராஜர் பொன்மொழிகள்... !!!
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2ம்தேதி அவரது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தூணாக நின்றவர் காமராஜர். ஒன்றைச் செய்ய விரும்பும் போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும். லட்சியத்தை அடைய அமைதியான வழிகளை பின்பற்ற வேண்டும். தன்னலம் சிறிதும் இன்றி மக்கள் பணியே மகத்தான பணி என்று பொற்கால ஆட்சி தந்து, பொதுநலத்துடன் செயல்பட்ட ஒப்பற்ற ஒரே தலைவன் காமராசர். கல்விக் கண் திறந்த கர்மவீரர், படிக்காத மேதை, பெருந்தலைவர் காமராஜர்.
எளிமையின் சிகரமான இவர் இந்திய பிரதமரையே உருவாக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்தார். அதனாலேயே அவரை கிங் மேக்கர் என அழைத்தனர். அதன் வாழ்நாளில் சில பொன்மொழிகளை நமக்காக விட்டு சென்றுள்ளார். அதை கீழே காணலாம்
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது
அளவுக்கு அதிகமாகப் பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ அதே போல் குறைவாகப் பேசுவதும் தீமையே.
பணம் இருந்தால் தான் மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதை எனக்கு தேவையில்லை.
அரசு என்பது எல்லா மக்களுக்கு சொந்தமானது.
கலப்பு மணம், சமபந்தி உணவு இவைகளால் சாதி அழியாது. மனிதனின் மனம் புரட்சிகரமான மறுதலை பெற்றால்தான் சாதி ஒழியும்.
நாடு உயர்ந்தால் நாம் உயர்வோம்.
எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்
எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகளும் இருக்கத்தான் செய்யும்.
நாடு முன்னேற வறுமையும் அறியாமையும் போக வேண்டும். இவை இரண்டும் போகாமல் நாடு முன்னேறியதாக சொல்ல முடியாது.
அப்பாவி ஏழை மக்களை வசதி கொண்டவர்களும் கல்மனம் கொண்டவர்களும் கசக்கி பிழிந்து விடாதபடி தடுக்க வேண்டியது மிக அவசியம்.
ஒரு பெண்ணுக்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமானவன்.
உன் பிள்ளையை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமமானவன்.
நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதும் கதாநாயகன்தான்
எந்தவிதமான அதிகார வர்க்கத்தில் இருந்தாலும் பொறுப்பு உணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். பொறுப்பு உணர்ச்சி இல்லாத அதிகாரம் நிலைக்காது.
Subscribe to:
Posts (Atom)