Labels

Saturday, May 11, 2024

தமிழினத் தலைவர் – கலைஞர்

தமிழினத் தலைவர் – கலைஞர் செ.அந்தோணி ராகுல் கோல்டன், தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் - விருதாளர், உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை இலயோலா கல்லூரி, சென்னை – 600 034. kvsrahul@gmail.com & n அலை - 9176313545 கலைஞரின் வாழ்க்கை வரலாறு தமிழினத் தலைவர், முத்தமிழறிஞர், டாக்டர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி இயற்பெயர் தட்சிணாமூர்த்தி , பிறப்பு: சூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து ஒரு பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர். இளமைப்பருவம் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 14ஆவது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தனது வளரிளம் பருவத்தில், வட்டார மாணவர்கள் சிலரின் உதவியுடன் இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பை உருவாக்கினார். இளைஞர்கள் தங்கள் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வளர்த்துக்கொள்ள அவ்வமைப்பு உதவியது. சில காலத்துக்குப் பின், அவ்வமைப்பு மாநில அளவிலான “அனைத்து மாணவர்களின் கழகம்” என்ற அமைப்பாக உருபெற்றது.இது திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் பிரிவாக இருந்தது. கருணாநிதி, மற்ற உறுப்பினர்களுடனான சமூகப் பணியில் மாணவர் சமூகத்தையும் ஈடுபடுத்தினார். தி.மு.க. கட்சியின் உத்தியோகபூர்வ செய்தித்தாளான முரசோலி வளர்ந்து அதன் உறுப்பினர்களுக்காக ஒரு பத்திரிகை ஒன்றை அவர் ஆரம்பித்தார். கருணாநிதி தமிழ் அரசியலில் களமிறங்குவதற்கு உதவிய முதல் பிரதான எதிர்ப்பு, கல்லக்குடி ஆர்ப்பாட்டத்தில் (1953) ஈடுபட்டது. இந்த தொழிற்துறை நகரத்தின் அசல் பெயர் கள்ளகுடி. இது வட இந்தியாவில் இருந்து ஒரு சிமென்ட் ஆலை ஒன்றை உருவாக்கிய சிம்மோகிராம் பிறகு டால்மியாபுரத்தில் மாற்றப்பட்டது. தி.மு.க. அந்த பெயரை கள்ளுகுடிக்கு மாற்ற வேண்டுமென விரும்பினார் . கருணாநிதி மற்றும் அவருடைய தோழர்கள் இரயில் நிலையத்திலிருந்து டால்மியாபுரம் என்ற பெயரை அழித்தனர் மற்றும் ரயில்களின் பாதைகளைத் தடுப்பதைத் தடுக்கிறார்கள். ஆர்ப்பாட்டத்தில் இருவர் இறந்தனர், கருணாநிதி கைது செய்யப்பட்டார். மாணவர் மன்றம் கருணாநிதி தன்னுடைய 14 வது வயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, அரசியலில் ஈடுபடலானார். அதன்பின் இந்தி எதிர்ப்பு போரட்டத்தின் மூலம் தன் அரசியல் தீவிரத்தைக் காட்டினார். அவர் வாழ்ந்த திருவாரூர் பகுதியில் இளைஞர்களை” மாணவ நேசன்” என்ற துண்டு கையெழுத்துப் பதிப்புகள் மூலம் ஒன்று திரட்டினார். அவ்விளைஞர் அணியை பின் மாணவர் அணியாக “தமிழ்நாடு மாணவர் மன்றம்” என்ற பெயரில் உருவாக்கினார். தமிழ்நாட்டில் உருவான முதல் திராவிட இயக்க மாணவர் அணி என்ற நிலையை ஏற்படுத்தினார். கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர். முரசொலி நாளிதழ் இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் 1957 இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது. இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: “மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு , தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு ” என்று அவர் கூறினார். அக்டோபர் , 1963 , இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும் , நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர். கலைஞர் மு.கருணாநிதி சாதனைகள் திரு. கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக சுமார் 50 ஆண்டுகள் பதவி வகித்தார். தமிழகத்தின் முதல்வராக நான்கு தசாப்தங்களில் ஐந்து முறை பதவிவகித்துள்ளார். 1957லிருந்து13 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட இவர், இதுவரை தோல்வியடைந்ததே இல்லை. 1971 மற்றும் 2006 என இருமுறை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது "தென்பாண்டி சிங்கம்" புத்தகத்திற்காக தமிழ் பல்கலைக்கழகம் ராஜராஜன் விருது வழங்கி சிறப்பித்துள்ளது கலைஞர் மு.கருணாநிதி சுவாரசிய தகவல்கள் பள்ளியில் படிப்பதை காட்டிலும் இசை, எழுத்து மற்றும் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வமாகவும், ஈடுபாட்டுடனும் இருந்தார் கருணாநிதி. பள்ளி இறுதியாண்டில் மூன்று முறை தோல்வியுற்றதால் பள்ளிப்படிப்பை கைவிட்டார். இவருக்கு பத்மாவதி,தயாளு அம்மாள், இராஜத்தி அம்மாள் என மூன்று மனைவிகள். கருணாநிதி- பத்மாவதி தம்பதிக்கு பிறந்த மகன் முத்து. தயாளு அம்மாளுக்கு அழகிரி, ஸ்டாலின், தமிழரசு என மூன்று மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர். இராஜத்தி அம்மாளுக்கு பிறந்தவர் கனிமொழி. பேச்சுத்திறன் மற்றும் அறிவாற்றலால் வெற்றிகரமான வசனகர்த்தாவாகவும், பிரபல அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். கருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான். கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்திவந்தது தமிழ் சினிமா. இந்த ட்ரெண்டை மாற்றி, ``மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை, நல்ல சமூகக் கருத்துகள்தான்'' என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில், சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. கருணாநிதியின் `பராசக்தி', `மந்திரிகுமாரி' பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதைச் சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. அரசியலில் நொடித்துப்போனால், நான் சினிமாவையும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.

வெற்றிப்பாதை!!

வெற்றிப்பாதை!! உருக்கப்படும் தங்கம் தான் உரு மாறி நகையாகிறது! அறுக்கப்படும் மரம் தான் அழகான ஜன்னலாகிறது! இடிக்கப்படும் நெல் தான் உமி நீங்கி அரிசியாகிறது! துவைக்கப்படும் துணி தான் தூய்மை பெற்று வெண்மையாகிறது! ஏற்றப்படும் விளக்கு தான் இருள் நீக்கி ஒளி தருகிறது! தட்டப்படும் தந்தி தான் தம்புராவில் இசை தருகிறது! செதுக்கப்படும் பளிங்கு தான் செம்மை பெற்றுச் சிலையாகிறது! பதப்படுத்தப்படும் தோல் தான் பயனுள்ள காலணியாகிறது! மிதிக்கப்படும் மண் தான் மிருதுவான பானையாகிறது! புதைக்கப்படும் விதை தான் மண்ணை விட்டு மரமாக எழுகிறது! தோற்றுப்போகும் மனிதன் தான் துணிவு பெற்று வீரனாகிறான்! தொடர்ந்து முயலும் வீரன் தான் படைத்தது வாழ்கிறான்! உங்கள் சிந்தனைக்கு ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தாலும் மீன் கிடைக்கும் வரையில் முயற்சியை கைவிடாத வெண்கொக்கு! ஆயிரக் கணக்கினில் அடி வாங்கினாலும் சிலையாகும் வரையில் உளியை உறவாக எண்ணும் கருங்கல்! கால்களில்லாத போதிலும் பாறைகளில் மோதியும் படுகுழியில் விழுந்து கடலைச் சேரும் குறிக்கோள்களை கடத்திவிடாத நதி! கைகளை துண்டித்தாலும் தலையைத் தறித்தாலூம் நிழல் பரப்பும் எண்ணத்தில் மீண்டும் தழைக்கின்ற மரம்! இரும்பு முள்ளில் குத்தினாலூம் ரணத்தையும் கூட ரசித்துக்கொண்டே வண்டியிழுக்கும் எருதுகள்! கனவு நிறைவேறும்வரை கலைத்து விடாதே முயற்சியை ஏனெனில்.. முயற்சி மட்டுமே முன்னேற்ற மாளிகைக்கு முதலிடமாகும்! முயல்வோம்..போராடுவோம்., வெற்றி பெறுவோம்.✍🏼 செ.அந்தோணி ராகுல் கோல்டன், தமிழக அரசின் தூய தமிழ்ப் பற்றாளர் - விருதாளர், உதவிப் பேராசிரியர், வணிகவியல் துறை இலயோலா கல்லூரி, சென்னை – 600 034. kvsrahul@gmail.com & அலை - 91+9176313545