Labels

Friday, December 09, 2022

கடைசி நேரம் யூ டூ புரூடஸ்

*கடைசி நேரம்*_ _ஜூலியஸ் சீசர் சாகும் பொது_ _துரோகம் செய்த நண்பனை பார்த்து 'யூ டூ புரூடஸ்.?_ _என்றார். இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது. நம்பிக்கைத் துரோகத்துக்கு இன்னமும் இந்த வார்த்தையைத் தான் உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது._ _*குண்டடிபட்டு மகாத்மா காந்தி இறக்கும் பொது கூறிய 'ஹே ராம்' அனைவரையும் பிரமிக்க வைத்த வார்த்தை....*_ _பெருந்தலைவர் காமராஜர்_ _தனது இறுதி_ _நிமிடங்களில் தன் உதவியாளரிடம்_ _கூறியது,_ _''வைரவா விளக்கை அனணத்து விடு''என்பது தான்._ _*ஆனால் தாமஸ் ஆல்வா எடிசனோ விளக்கை எரிய விடச் சொன்னார். அவரது கடைசி வார்த்தை "விளக்கை எரிய விடுங்கள். என் ஆவி பிரியும் பொது வெளிச்சம் இருக்கட்டும்".*_ _ரோம் சாம்ராஜ்யத்தின் அதிபயங்கர கொடுங்கோல் மன்னனான, காலிகுலா, தன்னை பாதுகாக்க வேண்டிய பாதுகாவலர்களாலேயே குத்திக் கொல்லப்படுகிறார். அந்த கொடுங்கோலனின் கடைசி வார்த்தையும் திமிராகத் தான் இருந்தது. "நான் இன்னும் இறக்கவில்லை."_ _*பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஜூல்பிகர் அலி பூட்டோ சொன்ன கடைசி வார்த்தை, "இறைவா. நான் ஒரு குற்றமும் செய்யாதவன்".*_ _உலகையே தனது அழகால் கவர்ந்த டயானாவின்_ _இறுதி வார்த்தை,_ _"கடவுளே என்ன_ _நடந்தது எனக்கு?''_ _*அழகுக்கு உவமையாக திகழும் கிளியோபாட்ரா ., தனது கையில் பூநாகத்தை பிடித்துக் கொண்டு, "ஆஹா... இதோ... என் முடிவு இங்கே இருக்கிறது" என்றார், கடைசியாக.*_ _இசை ஜாம்பவான் பீத்தோவன்_ _இறக்கும் பொது_ _"நண்பர்களே கை தட்டுங்கள்..._ _இந்த நகைச்சுவை நாடகம் இன்றோடு முடியப்போகிறது" என்றார்._ _*விஞ்ஞானி மேரிக்யூரிசாகும் தருவாயில் சொன்ன வார்த்தை "என்னை தனிமையில் இருக்க விடுங்கள்."*_ _பொருளாதார விஞ்ஞானியாகவும், அமெரிக்க அதிபராகவும் இருந்த பெஞ்சமின் பிராங்க்ளின், "இறக்கும் மனிதனால் எதையும் எளிதாகச் செய்ய முடியாது" என்றார்._ _*இந்தியாவில் மொகலாய சாம்ராஜ்யத்தை நிறுவிய பாபரின் இறுதிவார்த்தை ''இந்தியாவில் உள்ள இந்துக்களை துன்புறுத்தாதே" என்பது தான். இதை தன் மகன் ஹுமாயுனிடம் சொல்லி முடித்தவுடன் உயிர்பிர்ந்தது.*_ _மரணம் அடைவதற்கு முன்பு ஒன்பது நாட்களாக கோமாவில் இருந்தார், வின்ஸ்டன் சர்ச்சில்._ _கோமாவில் விழுவதற்கு முன் பேசிய கடைசி வார்த்தை "எனக்கு எல்லாமே போர் அடிக்குது" என்பது தான்._ _*எல்லா பெரிய மனிதர்களுமே இறக்கும்போது, எதோ ஒன்றை உலகுக்கு சொல்லி விட்டுதான் விடைபெற்று போய் இருக்கிறார்கள்.*_

No comments:

Post a Comment