Labels

Tuesday, September 08, 2020

ஆனந்த கண்ணீர்

ஒரு குட்டி கதை* "அமெரிக்காவில் மிகப்பெரிய பணக்காரர் அவர்..... தன் தாயின் பிறந்தநாளுக்கு பரிசளிக்க ....ஒரு பெரிய கடையின் முன், தன் காரை நிறுத்துகிறார். பிரபலமான பூக்கடை அது ,..." எவ்வளவு விலை சார் இது" " 250 டாலர்"!!. " இதைவிட அருமையான 'பூ 'காண்பிக்க முடியுமா? "வந்தவர் மிகப்பெரிய பணக்காரர் என கடைக்காரருக்கு தெரிகிறது.... " இது "ஆர்கிட்"வகைப் பூ...மிகஅருமையா இருக்கும்.... ஒரு வாரம் வரை வாடாது" "500 டாலர்"!! சரி, இதையே , 'பேக் செய்யுங்க... "உங்களிடம், "கொரியர்" சர்வீஸ் இருக்கா? கொரியர் சர்வீஸ்'சும், செய்கிறோம் ...அதற்கு ஒரு 100 டாலராகும். "வேண்டாம்... இந்த பூங்கொத்து இன்று என் தாயிடம் போய் சேர வேண்டும் இன்று என் தாயின் பிறந்தநாள் கொரியர் சர்வீஸ்' பல காரணங்களுக்காக தாமதமாகலாம் எனக்கு இன்றே போகணும்.... ஒன்று செய்யுங்க.....' ஒரு காரும் டிரைவரும், ஏற்பாடு செய்து ...இந்த பூங்கொத்தை,இன்றே என் தாயிடம் ,இந்த அட்ரஸ் சில் சேர்த்திடுங்க. "ஓகே சார், இப்பவே ஏற்பாடு செய்கிறேன் இன்றே போய் சேர்ந்துவிடும்.... அதற்கும் சேர்த்து 500 டாலர். " நோ ப்ராப்ளம் பணத்தையும், அம்மாவின்,வீட்டு அட்ரஸ் கொடுத்து விட்டு நகர்ந்தார் அந்த பணக்காரர். மனம் முழுக்க மகிழ்ச்சி, தன் பிஸி நேரத்திலும், தன் அம்மாவின் பிறந்தநாளை மறக்காமல் ,பூங்கொத்து அனுப்பி விடுகிறோம் என சந்தோஷத்துடன் காரை காரில் ஏறப் போக..... ஒரு சின்ன சிறுமி ஒரு ஐந்து ஆறு வயது இருக்கும் அழுதபடி இருக்கிறாள்....." குழந்தை ஏன் அழறே? " அங்கிள் , எனக்கு ஒரு டாலர் பணம் தர முடியுமா ? ஓகே, ஒரு டாலர் தானே தரேன் எதற்குப் பணம்? ஏன் அழுகிறாய்? ஏதாவது தொலைத்து விட்டாயா? 'நோ அங்கிள் " எங்க அம்மாவின் பிறந்தநாள் அங்கிள் இன்று ... நான் வருடா,வருடம் அம்மாவின் பர்த்டே க்கு, அம்மாவுக்கு பிடித்த ஒரு ரோஜா பூ வாங்கித் தருவேன் என்று அம்மாவின் பிறந்தநாள்...என்னிடம் பணம் இல்லை......நீங்க ஒரு டாலர் கொடுத்தால் ஒரு ரோஜா பூ வாங்கி அம்மாவிற்கு கொடுப்பேன். அம்மா எனக்காக வெயிட் டிங்'.... ப்ளீஸ் அங்கிள் ஒரு டாலர் தரமுடியுமா? " பாவம் ஏழை பெண் அவள்....." ஒரு டாலர் என்னமா!.... 10 டாலர் தரேன் எடுத்துக்கோ ... "வேண்டாம் அங்கிள், ஒரே ஒரு டாலர் போதும்.... என ஒரு டாலரை மட்டும் எடுத்துக்கொண்டு 'சிட்'டாக பறந்தாள் அச் சிறுமி. ஏதோ சாக்லேட் வாங்க தான் அப்படி ஒரு டாலர் கேட்கிறாளோ? என நினைத்து அந்த பணக்காரர் மெதுவாக காரை அவள் செல்லும் இடம் நோக்கிச் செலுத்த சொன்னார் டிரைவரிடம். .ஒரு சின்ன பூக்கடையில் ஒரு டாலர் கொடுத்து ஒரு சிகப்பு ரோஜா பூ வாங்க .....கடைக்காரர் அதை அழகாக பேக் செய்து கொடுக்கிறார். மிகுந்த சந்தோஷத்துடன், அச்சிறுமி' பூ வை எடுத்தபடி ஓட ....அச் சிறுமி எங்கு போகிறாள்?... எந்த வீடு?.. தாய் யார்? என அறிய டிரைவரிடம் காரை சிறுமியின் பின்னால் போக சொல்லுகிறார். சிறுமி, பல தெருக்களைக் கடந்து ஓடுகிறாள்.... அவளுக்கு தெரியாமல் அவளைப் பின் தொடர்கிறது கார்.. பல வளைவுகளை,தெருக்களை கடந்து,ஓடும் அவள்......போய் நிற்கும் இடம் சமாதி........ ஒரு கல்லறையின் அருகில் போய் நின்று, ரோஜா பூவை வைத்து.... "அம்மா, 'ஹாப்பி பர்த்டே' உனக்கு மிகப் பிடித்த ரோஜா பூ நான் வாங்கிட்டு வந்துட்டேன் மா ....என கூறி அம்மாவின் கல்லறையில் வணங்கி.... முத்தமிட ,....பார்த்துக்கொண்டிருந்த பணக்காரர்களில் கரகரவென நீர் சுரந்தது . "சார் , 'மீட்டிங்கிற்கு, நேரமாச்சு... டிரைவர் அவசரப்படுத்த, கண்ணை துடைத்த படி அவசர அவசரமாக காரில் ஏறி, கடைக்கு போய், தான் வாங்கி வைத்த பூங்கொத்ததை, எடுத்துக்கொண்டு வண்டியை,வீட்டிற்கு போக சொன்னார். "பெரிய கார் ,தன் வீட்டின் முன் நிற்பதை பார்த்த .....92 வயதுடைய தாய் கண்ணை சுருக்கி," யாரது ?என பார்க்க .... "அம்மா என அழைத்தபடி பூங்கொத்தை கொடுத்து.... "பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா "என காலில் விழுந்த, மகனை ஆரத் தழுவிய தாய்...... " உனக்கு இருக்கும் எக்கச்சக்க வேலையில், ஏம்பா நீ வந்தே!!!! " அம்மா ,"அன்பை எப்படி வெளிப் படுத்துவது, என ஒரு சிறுமியிடம் நான் கற்றேன். " உயிரோடு இல்லாத தன் தாய்க்கு அச் சிறுமி எப்படி பூங்கொத்தை கொடுத்து அன்பை வெளிப்படுத்தினாள்.....நெகிழ்ந்து விட்டேன்... ஆனால் நான்?...அச் சிறுமியின் மூலமாக அன்பை, எப்படி வெளிப் படுத்துவது என அறிந்தேன் "உயிரோடு இருக்கும், என் தாய்க்கு நேரில் வந்து வாழ்த்து,பார்த்து, வாழ்த்து பெறுவதை விட பெரும் பாக்கியம் எனக்கு ஏது?...மகனை கட்டி அணைத்து முத்தமிட்டாள் அத் தாய். " தாய், தந்தை இருப்பவர்கள்.....அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை, அன்பை, வாரி வழங்க தவறாதீர்கள்....அன்பை வெளிப்படுத்த மறக்காதீர்கள். உங்களின்,உங்கள் பண்பின்,அன்பை நினைத்து,மகிழ்ந்து.... ஒரு சொட்டு கண்ணீர் உங்கள் தாயின் கண்களில் இருந்து வந்தால்.....உங்கள் வாழ்க்கை சிறக்கும்..... *எல்லா தாய்க்கும் தன் பிள்ளைகளின் மகிழ்ச்சி,உயர்வு என்றும் சந்தோஷம்* *சந்தோஷத்தில்,...மகிழ்ச்சியில், எல்லா தாயின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் தான் சுரக்கும்.....*

webinar on “Scanning Electron Microscope And Its Associated Techniques” on 12th september via Google meet or Zoom software.

Dear All, Greetings from IIT Indore! I am writing this email to invite you to a webinar on “Scanning Electron Microscope And Its Associated Techniques” on 12th september via Google meet or Zoom software. The webinar talk will cover the basics of scanning electron microscopy and its associated advanced techniques in the point of view of microstructural analysis and structural material application. The webinar mainly covers the various imaging techniques available in SEM. The participants are also introduced to energy dispersive spectroscopy (EDS), ion beam methods and electron backscattered diffraction (EBSD) techniques. At the conclusion of this webinar any students, faculties and Industries working in the area of microstructural analysis can gain the knowledge of usage of SEM techniques on their research needs. • Understand the basics of SEM • Learn about the secondary and backscattered electron imaging • Introduced to EDS, EBSD techniques and ion beam methods • Learn about current hot research area - High entropy alloys Webinar Title: “Scanning Electron Microscope And Its Associated Techniques” Expert Speaker – Dr. Dan Sathiaraj, Assistant Professor, Discipline of Mechanical Engineering, IIT Indore. Webinar Date: 12.09.2020 Time: 10.00 – 11.15 A.M. Registration for the Webinar is now open Please go to the following link for more details: http://iiti.ac.in/page/announcement-of-webinars-by-iit-indore-faculty-members Last Date to Register Online : 10 September 2020, 12 Noon Registration Fee: INR. 500 /- E-Certificate or Hard Copy will be issued for registered candidates. Once you register & pay registration fee you would receive acknowledgement/receipt via email. Kind regards Dr. Dan Sathiaraj Assistant Professor, Discipline of Mechanical Engineering Room No: 711, Scandium Building IIT Indore, Khandwa Road, Simrol, Madhya Pradesh - 453552 office Phone +91 731 - 2438700 Ext 349