Dear Sir/Madam,
We are sharing YouTube links for the various sessions of Webinar Series-1 on Social Science Research.
This is for learning and updating yourself. These days, learning is very important. So keep on learning and enjoy to learn a lot. Learning brings Happy and Achievement. Anybody wishes to share your ideas, information and so on send to us at racommerce5@gmail.com. Kindly follow by giving your mail id at the follow box for getting the updates properly. Sharing Information is our SERVICE. Thank you
Dear Participants, Warm greetings from *PG and Research Department of Management* J.J.COLLEGE OF ARTS AND SCIENCE (Autonomous) JJ nagar, Sivapuram post, Pudukkottai With pleasure our Department organises the On line FDP on "R for Business Analytics - An Overview" on Monday 8th June 2020 *Registration fees Rs.100* After your Google payment for registration is over, kindly Whatsapp your NAME and REGISTERED E.MAIL ID to 9443070795. Work Materials and E-Certificate will be provided to your registered email. Pls Click the following link for Registration https://forms.gle/ Last Date for Registration is 7th June 2020 by 04.00.p.m. Regards Co ordinator Dr. B. Anitha Rani Assistant professor PG and Research Department of Management J. J. College of Arts and Science, Pudukkottai. 98422 86242 *Best wishes to you all* Stay home, stay healthy Sent from my Samsung Galaxy smartphone.
|
*அசையா சொத்துக்களுக்கு அவசியமான வில்லங்க சான்று* *எஸ்,முருகேசன்* வில்லங்க சான்றில் 3 விதங்கள் ஆன்லைன் ஆவணம் அலுவலக கணினி ஆவணம் மேனுவல் பதிவேடு பல்வேறு பதிவுகள் பழைய மற்றும் புதிய அலுவலகங்கள் வில்லங்க சான்று சிக்கல்கள் அறிமுகம் வில்லங்க சான்றிதழ் என்பது குறிப்பிட்ட ஒரு சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து பரிமாற்றங்களையும் தேதி வாரியாக யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதன் ஆவண எண், சொத்தின் நான்கு புற எல்லைகள் போன்ற விவரங்களை குறிப்பிடும் பதிவேடு ஆகும். குறிப்பிட்ட சொத்துக்கான ஆவணங்களின் உண்மை தன்மையை ECல் உள்ள ஆவண எண்களை, கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்பிட்டு கவனிக்க இயலும். இதர ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக இருந்தால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அடுக்குமாடி வீடுகள், தனி வீடுகள் கட்டமைக்கும் பில்டர்கள் சொத்துக்கான Completion Certificate, Occupy Certificate ஆகியவற்றையும், வங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் சொத்து சம்பந்தமாக பெறப்பட்ட கடன்கள், நீதிமன்ற உத்தரவுகள் ஏதேனும் இருப்பின் அவற்றையும் EC–ல் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றில் 3 விதங்கள்ஆன்லைன் ஆவணம் இன்றைய நிலையில் அரசு பொது சேவை மையம் அல்லது கம்ப்யூட்டர் சென்டர் ஆகியவற்றின் மூலம் விருப்பப்படும் அனைவருமே தங்களது சொத்துக்களுக்கான வில்லங்க சான்றை இணைய தளம் மூலம் பதிவாக பெற்றுக்கொள்ளலாம். இதில் கியூ.ஆர் கோடு இருப்பதால் அதை ஸ்கேன் செய்து கொள்ளலாம். அலுவலக கணினி ஆவணம் பத்திர பதிவு அலுவலக பணிகளில் கணினி நடைமுறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், விண்ணப்பித்தவர்களுக்கு அளிக்கப்படும் கம்ப்யூட்டர் பிரிண்டு ஆவணமாக வில்லங்க சான்று தரப்பட்டது. இதில், சார்பதிவக முத்திரை மற்றும் பதிவாளர் கையெழுத்து ஆகியவை இருக்கும். அதன் காரணமாக, வழக்கறிஞர்கள், கடன் அளிக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை இவ்வகை வில்லங்க சான்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக சொல்லப்படுகிறது. மேனுவல் பதிவேடு 1980–க்கு முன்னர் பெரும்பாலான சார்பதிவு அலுவலகங்களில் மேனுவல் முறையில் பத்திரப்பதிவு மேற்கொள்ளப்பட்ட நிலையில் அந்த பத்திரங்களுக்கான வில்லங்க சான்றை மேனுவல் முறையில்தான் பெற இயலும். முன்னதாக தயார் செய்யப்பட்ட படிவத்தில் கைகளால் எழுதப்பட்டு, சார்பதிவக முத்திரை மற்றும் சார்பதிவாளர் கையெழுத்து ஆகியவை கொண்ட பதிவேடாக இது இருக்கும். பல்வேறு பதிவுகள் குறிப்பிட்ட ஒரு சொத்துக்கு 50 ஆண்டுகளுக்கு EC தேவை என்ற நிலையில் சுமாராக 1960–ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட பத்திரப்பதிவுகளை கவனிக்க வேண்டும். கிட்டத்தட்ட 1980–ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவுகள் கணினி மயமான நிலையில், குறிப்பிட்ட காலம் வரை மேனுவலாகவும் அதன் பின்னர் கம்ப்யூட்டர் பதிவாகவும் பெற வேண்டியதாக இருக்கும். பழைய மற்றும் புதிய அலுவலகங்கள் குறிப்பிட்ட சொத்து என்பது ஒரு சார்பதிவு எல்லைக்கு உட்பட்டதாகவே எல்லா காலத்திலும் இருப்பதில்லை. 35 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தப்பட்ட சொத்துக்கான பத்திர பதிவு அலுவக எல்லை வேறொன்றாக இருந்திருக்கலாம். அல்லது பதிவுத்துறை நிர்வாக அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தற்போதைய புதிய அலுவலக எல்லைக்குள் சொத்து அமைந்திருக்கலாம். மேற்கண்ட அடிப்படைகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வில்லங்க சான்று விண்ணப்பம் செய்து பெற வேண்டும். அதனால், ஒரு சொத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மேனுவல் மற்றும் கம்ப்யூட்டர் வில்லங்க சான்றுகள் இருக்க வாய்ப்பு உண்டு. வில்லங்க சான்று சிக்கல்கள் இன்றைய அவசர உலகத்தில் பரபரப்பான நகர்ப்புற வாழ்வில் பெருநகரங்களில் உள்ள சொத்துக்கள் சம்பந்தமாக கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பல ரியல் எஸ்டேட் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதனால் வீடு அல்லது மனைக்கு கிட்டத்தட்ட 1 அல்லது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது ஆன்லைன் EC எடுத்து பார்த்துக்கொள்வது நல்லது. ஏதாவது குழப்பங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் வில்லங்க சான்று பெற்றும் கவனிக்க வேன்டும். மேலும், நகர்ப்புறங்களில் சொத்து வாங்குவது அல்லது சொத்து சம்பந்தமான மற்ற பரிமாற்றங்களை செய்யும்போது அதற்கான பதிவு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் EC பெற்று விவரங்களை அறிந்து கொள்வதும் முக்கியம் Sent from my Samsung Galaxy smartphone.
|
*F.I.R - ‘முதல் தகவல் அறிக்கை’* *எஸ்,முருகேசன்* First Information Report – என்பது F.I.R-ன் விரிவாக்கம். தமிழில் ‘முதல் தகவல் அறிக்கை’. குற்றம் சாட்டப்பட்டவர் மீது போலீஸாரால் பதியப் படும் வழக்கு ஆவணம். “இந்திய தண்டனைச் சட்டத்தில், அனைத்து வகைக் குற்றங்களையும் இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். அதாவது, புகார் அளித்ததும் குற்றம்சாட்டப்பட்டவரைக் கைது செய்ய வேண்டிய குற்றங்கள், உடலில் ரத்தக் காயங்களை ஏற்படுத்தும் குற்றங்கள் மற்றும் சிறிய, பெரிய அளவிலான பண மோசடிகள் ஆகியவை உடனடி கைது நடவடிக்கை வேண்டுபவை. இவற்றுக்கு உடனடியாக F.I.R பதிய வேண்டும். உடலில் காயம் ஏற்படாத மன உளைச்சலை உண்டாக்கும் வகையிலான குற்றங்கள் இரண்டாவது பிரிவில் அடங்குபவை. இந்தக் குற்றங்களில் பாதிக்கப் பட்டோரின் புகாரை அந்த எல்லைக்கு உட் பட்ட நீதிமன்றத்துக்கு அனுப்பி, மாஜிஸ்ட்ரேட்டின் ஒப்புதல் பெற்ற பிறகுதான், F.I.R பதிவு செய்ய முடியும். சம்பவம் நடந்த இடத்தை நிர்வகிக்கும் காவல் நிலையத்தில்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால், அவசர காலம் என்றால், அருகில் இருக்கும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம். பொதுவாக, F.I.R பதிவு செய்யும் நபர், முதல் நிலை காவலர் அந்தஸ்துக்கு (பக்கவாட்டில் இரு வெள்ளைக் கோடு இருக்கும் காக்கி யூனிஃபார்ம் அணிந்து இருக்கும் காவலர்கள்) குறையாத நபராக இருக்க வேண்டும். அவருக்கும் மேல் உள்ள அதிகாரிகளான டி.எஸ்.பி., எஸ்.பி., என எவரிடமும் புகாரைப் பதிவு செய்யலாம். பாதிக்கப்பட்டவர் வாய்மொழி வாக்குமூலமாகக்கூட புகார் அளிக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி அந்த வாக்குமூலத்தைப் புகாராக எழுதி, புகார்தாரரின் கையொப்பத்தையோ கை ரேகையையோ அதில் இடம் பெறச் செய்ய வேண்டும். பிறகு, குற்றம் நடந்து இருப்பதை உறுதிசெய்து, உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். பிறகு, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 511 பிரிவுகளில் புகார்தாரரின் பாதிப்புக்கு தக்க பிரிவுகளில் வழக்கினைப் பதிவுசெய்ய வேண்டும். பிறகு, தாமதிக்காமல் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு அந்த F.I.R-ஐ நேரிலோ, தபாலிலோ அனுப்பிவிட வேண்டும். அந்த F.I.R நீதிபதிக்குக் கிடைத்துவிட்டதை உறுதிப் படுத்திக்கொண்டு, விசாரணை நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்த நடைமுறைகளைச் சரிவர மேற்கொள்ளாத சமயத்தில்தான், வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரும்போது, ‘குற்றம் நடந்த நேரம், F.I.R பதிவு செய்யப்பட்ட நேரம், அது நீதிமன்றத்துக்குக் கிடைத்த நேரம்’ ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றவாளிகள் தப்பித்துவிடுவார்கள். ஒரு F.I.R என்பது மொத்தம் ஆறு நகல்களைக் கொண்டது. காவல் அதிகாரி எழுதும் அசல் F.I.R அந்த நோட்டிலேயே இருக்கும். அதைக் கிழிக்கக் கூடாது. கார்பன் தாள் வைத்து எழுதப்படும் மீதி ஐந்து நகல்களைத்தான் புகார் தாரர், நீதிமன்றம் என விநியோகிக்க வேண்டும். புகார்தாரருக்கு F.I.R நகல் அளிக்க வேண்டியது அவசியம். அப்படித் தராமல் இருப்பதுகூட ஒரு குற்றம் |
ஆதாரம் : *சென்னை உயர்நீதிமன்றம்* *ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரின் உரிமைகள்* *எஸ்,முருகேசன்* உரிமைகள்கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்..கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள் உரிமைகள் நபரின் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.பிடிப்பாணையின் (Warrant) பேரில் நபர் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையை பார்க்க நபருக்கு உரிமை உண்டுநபரின் விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரை கலந்தாலோசிக்கும் உரிமை நபருக்கு உண்டு24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) முன்பாக நபரை கொண்டு செல்லப்பட வேண்டும்பிணையில் (Bail) விடுவிக்க பட கூடியவரா என்பது நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும்சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி ஒருவர் வன்முறையாளராகவோஅல்லது மூர்க்கமான குண இயல்பு கொண்டவராகவோ அல்லது தப்பி ஓட முயல்பவராகவோ அல்லது தற்கொலைக்கு முயல்பராகவோ இருந்தால் ஒழிய கைது செய்யப்பட நபருக்கு விலங்கிட கூடாது.கைது என்பது தண்டனையல்ல. நீதி மன்ற தீர்ப்பு வரும் வரை குற்றம் இழைத்தவராக ( Convict ) கருத முடியாது கைது செய்யப்பட நபரை காவலில் வைத்தல்.. கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் கைது செய்து 24 மணி நேரத்திற்குள்ளாக (கைதான இடத்திலிருந்து நீதி மன்றம் செல்ல தேவைப்படும் பயண நேரம் நீங்கலாக) அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணி நேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல் துறைக்கு இல்லை. குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலில் தொடர சொன்னால் ஒழிய 24 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது. கைது குறித்து உச்ச நீதி மன்றத்தின் கட்டளைகள் கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்ய வேண்டும்கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்கு தெரிவிக்க வேண்டும்.கைது செய்யப்பட்ட விபரம் 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்கைது செய்யப்பட்டவர் உடல் நிலையை பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும்.கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும். இவையெல்லாம் நிஜத்தில் காவல் துறை செய்கிறதா அப்படி அவர்கள் இதன் படி நடக்காவிடில் என்ன செய்வது ? முடிந்த வரை காவல்துறை இவற்றை செய்யும். அல்லது அவர்கள் ரிக்கார்ட் அப்படி இருக்கும்இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை கோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்ல முடியும்.அத்தகைய நேரங்களில் காவல் துறை அதிகாரியை கோர்ட் கண்டிக்கலாம்.நடைமுறைகளை பின்பற்றாவிட்டால், அதன் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை கூட செய்யலாம். |