This is for learning and updating yourself. These days, learning is very important. So keep on learning and enjoy to learn a lot. Learning brings Happy and Achievement. Anybody wishes to share your ideas, information and so on send to us at racommerce5@gmail.com. Kindly follow by giving your mail id at the follow box for getting the updates properly. Sharing Information is our SERVICE. Thank you
Labels
Thursday, July 08, 2021
புத்தகம் பற்றிய பொன்மொழிகள்
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்
உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்
போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்
உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்
உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான்...
வாசகன் அதனை முடித்து வைக்கிறான்.
- சாமுவேல் ஜான்சன்
"படிப்புதான் ஒருவன் உயர வழி" என்றார்
காமராஐர்
"புத்தகத்தை படித்து முடித்த பிறகே
அறுவை சிகிச்சை" என
ஒருநாள் தள்ளிவைத்தார்
அறிஞர் அண்ணா
"புத்தகங்கள் படிப்பதையே
வழக்கம் ஆக்குங்கள்"
என்றார் அப்துல் கலாம்
இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்
எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.
தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்.
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி.
நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. -மார்க் டிவைன்.
புத்தக பொன்மொழிகள்
நல்ல புத்தகங்களைப் போன்ற நம்பிக்கை இந்த உலகத்தில் இல்லை - ஆங்கிலப் பழமொழி
என் மனம் விரும்பும் நூல்களைக் கொடுங்கள். வாழ்நாள் முழுதும் சிறையில் வாழச் சம்மதிப்பேன்
- மாஜினி
பயன்படுத்தப்படாத புத்தகம் வெறும் காகிதக் கட்டுதான் - சீனப் பழமொழி
நான் தெரிந்துகொள்ள வேண்டியவை புத்தகங்களில் இருக்கின்றன. நான் படிக்காத நூல் ஒன்றை எனக்குத் தருபவர்களே எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்
- ஆபிரகாம்லிங்கன்
அக்கறை உள்ள பெற்றோரும், அலமாரி நிறையப் புத்தகங்களும் வாய்க்கப்பெறும் குழந்தையே அதிர்ஷ்டசாலி - ஜான்மெக்காலே
ஒரு நல்ல படிப்பாளி கொஞ்சம் விஷயங்களைப் பற்றியாவது முழுமையாகத் தெரிந்திருக்க வேண்டும். பல விஷயங்களைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும் - மார்க்ஸ் அரேலியஸ்
மூடத்தன நோயை முற்றாக விரட்டும் மூலிகைகளே புத்தகங்கள் - சீனப் பொன்மொழி
ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை - சிசரோ
நூலகம் இல்லாத ஊரை நான் ஒரு ஊராக மதிப்பதே இல்லை
- மாமேதை லெனின்
எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது - பிளாட்டோ.
"மனிதனைப் போலத்தான் புத்தக மும் ஒரு வாழ்வின் தோற்றமாகும்; அதற்கும் உயிருண்டு; அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல”
மாக்சிம் கார்க்கி.
எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன – வால்ட் டிஸ்னி.
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.
வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.
மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்
புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.
எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா.
போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்
உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆஸ்கார் வைல்ட
ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.
நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்
பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்
Sources
FB & Websites
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment