Labels

Friday, July 09, 2021

புத்தகம் பற்றிய பொன்மொழிகள்

1.எல்லோராலும் மதிக்கப்படும் புத்தகம் பெரும்பாலானோரால் படிக்கப்படுவதில்லை.! 2. என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும் என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தவை தான்.! 3. மோசமான உணர்வுகள் தான் ஒரு நல்ல புத்தகத்தை உருவாக்கிறது.! 4. உண்மையான வாசகன் வாசிப்பதை நிறுத்துவது கிடையாது.! 5. மிக நல்ல புத்தகங்களை கிடைத்த உடனே படித்து விடு.. இல்லையேல் அவற்றைப் படிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காமலே போய்விடும். 6. ஒரு எழுத்தாளன் ஒரு நூலை ஆரம்பித்து வைக்கிறான்.. வாசகன் அதனை முடித்து வைக்கிறான். 7. புத்தகங்களை படிப்பதை விட.. மனிதர்களை படிப்பதே மிக மிக முக்கியம். 8. மோசமான உணர்வுகள் தான் ஒரு நல்ல புத்தகத்தை உருவாக்கின்றது. 9. புத்தகம் இல்லாத வீடு ஆன்மா இல்லாத கூடு. 10. மற்றவர்களுக்கு கொடுக்கும் பரிசில்களில் மிகச் சிறந்த பரிசு புத்தகங்கள் தான். 11. புத்தகத்தை சேமித்து பயனில்லை.. புத்தகத்தில் உள்ளதை மூளையில் சேமிக்க வேண்டும். 12. சிறந்த புத்தகங்கள் விலைமதிக்க முடியாத பொக்கிஷங்களை தன்னகத்தே தாங்கியுள்ள எல்லையற்ற சமுத்திரங்கள். 13. சிலவற்றை படிக்க வேண்டும்.. சிலதை அசைபோட வேண்டும்.. சிலவற்றை ஜீரணிக்க வேண்டும். 14. மேலட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே. 15. படிப்பது.. சிந்திப்பது.. நேரத்தை திட்டமிடுவது என்று தொடர்ந்து முதலீடு செய்ய தயாராக இருங்கள். 16. புத்தகம் இல்லாத வீடு ஜன்னல்கள் இல்லாத அறை. 17. புத்தகங்கள் சிந்தனை நிரம்பிய பீரங்கிகள். 18. வாழ்க்கை மிக குறுகியது பயனற்ற புத்தகங்களை படிப்பதில் நமது காலத்தை வீணாக்கிவிட கூடாது. 19. எனக்கு நண்பர்களே இல்லை என்று கவலைப்பட வேண்டியதில்லை.. ஏனென்றால் அவர்கட்கு புத்தகம் சிறந்த நண்பனாக இருக்கும். 20. பேராசையை விட புத்தகங்களை அதிகம் நேசிக்க தொடங்குங்கள். 21. மனிதர்கள் மரணமடைகிறார்கள் ஆனால் அவர்களின் புத்தகங்கள் மரணம் அடைவதில்லை.. அவைகள் சாகாவரம் பெற்றவை. 22. புத்தகங்கள் மனிதனை உருவாகின்றன.. புத்தகங்கள் மனிதர்களை உறக்கத்தில் இருந்து விழிப்படைய செய்கின்றன. மாபெரும் புரட்சிகளுக்கு புத்தகங்கள் தான் காரணமாக இருக்கின்றன. 23. பெரியோரின் மொழிகள் புரிந்து கொள்வதற்கு சிறிது நேரம் ஆகலாம்.. ஆனால் அதனுடைய தாக்கம் மிகப் பெரிது. 24. ஆயிரம் புத்தகங்களை வாசித்த ஒருவன் இருந்தால்.. அவனே சிறந்த வாழ்க்கை வழிகாட்டி. 25. தனிமை தரும் அற்புத சுகங்களில் ஒன்று தான்.. புத்தகங்கள் வாசிப்பது. 26. ஒரு புத்தகத்தை கையில் எடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.. நீங்கள் கையில் வைத்திருப்பது ஒரு மனிதனின் இதயத்தை. 27. எப்போதும் வசந்தகாலம் தான் புத்தகங்களோடு வாழ்பவனுக்கு. 28. நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்த பிறகு.. நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல புத்தகங்களை தான். 29. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே. 30. போதும் என நொந்து புதிய வாழ்வை தேடுகிறீர்களா..? ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்க தொடங்குங்கள். Sources FB & Websites.

No comments:

Post a Comment