Labels

Monday, June 16, 2025

"ஒளி வீசட்டும்" .....

 புதிய கல்வியாண்டு – வரவேற்புக் கவிதை.


ஒளி வீசட்டும் .....

வாசல் திறக்கிறது அறிவின் ஒளிக்கு,
வானம் விழிக்கிறது கனவின் வழிக்கு.
புதிய ஒரு பாதை, புதிய ஒரு பயணம்,
புதிய உந்துதல், உயர்த்தும் உன்னை சிகரத்தில்.

மழைப்பட்ட மரம் போல மாணவ மனங்கள்,
மலரப் போகின்றன எண்ணங்களின் மழையில்.
வளரப் போகின்றன புதுமையின் வெளிச்சத்தில்,
வலிமை பெறுகின்றன வித்தியாசமான கேள்விகளில்.

வாசிக்கப்படும் புத்தகம் அறிவுக்கு தோழன்,
வகுப்பறை நம்மை வளமாக்கும் அறிவுத்தோட்டம்.
ஆசிரியர் வார்த்தைகள் விளக்காக எரியும்,
அறியாமை இருள்நெஞ்சங்களை அழகாய் மாற்றம் அலாவுதீன் அற்புதம்.

புதிய முகங்கள், புதிய சிரிப்புகள்,
நட்பின் வேர்கள் இங்கு புதைந்திருக்கும்.
நீடிக்கும் நல்நினைவுகள் இங்கே உருவாகும்,
நாளைய உலகை மாற்றும் விதைகள் விதைக்கப்படும்.

சிறிய தவறுகள் பயத்தை வேண்டாம்,
சிறந்த முன்னேற்றம் முயற்சியில் பிறக்கும்.
நீங்கும் சந்தேகம், நிச்சயம் பிறக்கும்,
நம்பிக்கையின் பலம் கல்வியால் வளரும்.


வந்திருக்கின்றீர்கள் கல்வி கோவிலுக்கு,
வாழ்த்துகள் வாழ்ந்துசிறக்க 
நாங்கள் எப்போதும் உங்களுக்காய் .
வளருங்கள் அறிவில், உயருங்கள் வாழ்வில்,
நீண்ட விழி உலகம், நீங்கள் தான் விளக்கு!

செ.அ.ராகுல் கோல்டன். 
(தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளர் விருதாளர்) 
உதவிப் பேராசிரியர் இலயோலா கல்லூரி சென்னை kvsrahul@gmail.com. அலை 9176313545

 With Regards.,    
                                                                                                          

Dr Anthony Rahul Golden S 
M.Com., M.Phil., NET., 
Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A.,  PGDBA., 
Asst. Professor of Commerce.Loyola College (Autonomous), Chennai - 34
Mobile No- 91+9176313545

https://yesrahul.blogspot.com/

https://orcid.org/0000-0001-8071-4801

https://www.researchgate.net/profile/Anthony-Golden-S 
https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ


No comments:

Post a Comment