Labels

Saturday, June 06, 2020

ஏ.டிஎம் இயந்திரத்தைத் தொடாமல் இனி பணம் எடுக்கலாம்: எப்படித் தெரியுமா?*

*ஏ.டிஎம் இயந்திரத்தைத் தொடாமல் இனி பணம் எடுக்கலாம்: எப்படித் தெரியுமா?*



ஏடிஎம் இயந்திரத்தைத் தொடாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை வங்கிகள் அறிமுகப்படுத்தவுள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, புதிய வகை ஏடிஎம் தொழில்நுட்பத்தை, ஏஜிஎஸ் டிரான்சாக்ட் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.

அதன்படி, வழக்கமான கார்டு மற்றும் பின் நம்பரை பயன்படுத்தாமல், செல்போனில் வங்கிகளின் செயலியை பதிவிறக்கம் செய்து, பின்னர் ஏடிஎம் மையத்திற்கு சென்று திரையில் காட்டும் QR கோடினை, மொபைல் செயலியில் ஸ்கேன் செய்து பணம் எடுத்துக்கொள்ளலாம். எவ்வளவு ரூபாய் எடுக்கவேண்டும் என்பதை செயலியிலேயே பதிவு செய்தால் அதே தொகை ஏடிஎம் திரையிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே பணம் எடுக்கலாம் எனவும், ஸ்கிம்மிங் கருவி மோசடிகளும் குறையும் எனவும் ஏஜிஎஸ் டிரான்சாக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment