_பசியறிந்து சோறு போட ஒருவர் *இருக்கும் வரை...*_
_சாப்பிட்டாயா எனக்கேட்க ஒருவர் *இருக்கும் வரை...*_
_தாமதமாகும் இரவுகளில் எங்கிருக்கிறாய் என விசாரிக்க ஒருவர் *இருக்கும் வரை....*_
_நோய் வருத்தும் இரவுகளில் கண் விழித்துப் பார்த்துக்கொள்ள ஒருவர் *இருக்கும் வரை...*_
_குரல் மாறுபாட்டில் மனநிலையைக் கணிக்க ஒருவர் *இருக்கும் வரை...*_
_போய்ச் சேர்ந்ததும் அழைப்பெடு என வழியனுப்ப ஒருவர் *இருக்கும் வரை...*_
_வீடடையக் காத்திருந்து கதவு திறக்க ஒருவர் *இருக்கும் வரை...*_
_தோற்றுப்போய் திரும்புகையில் தோள் சாய்த்துக்கொள்ள ஒருவர் *இருக்கும் வரை...*_
_போ என்றாலும் விட்டுப்போகாது சண்டை போட்டுக்கொண்டேனும் உடனிருக்க ஒருவர் *இருக்கும் வரை...*_
_மனம் கனக்கும் நினைவுகளைப் பகிர்ந்துக்கொள்ள ஒருவர் *இருக்கும் வரை....*_
_நம் கனவுகளை தம் கனவுகளாகத் தோள்களில் தூக்கி சுமக்க ஒருவர் *இருக்கும் வரை...*_
_எதற்காகவும் எவரிடமும் நம்மை விட்டுக்கொடுக்காத ஒருவர் *இருக்கும் வரை...*_
_கூட்டத்தின் நடுவே தனித்துப்போகையில் கரங்கள் பற்றி நானிருக்கிறேனென உணர்த்த ஒருவர் *இருக்கும் வரை...*_
_தவறுகளைத் தவறென சுட்டிக்காட்டித் திருத்தும் ஒருவர் *இருக்கும் வரை...*_
_துயர் அழுத்தும் கணங்களில் அருகிருந்து கண்ணீர்த்துடைக்க ஒருவர் _*இருக்கும் வரை....*_
_மனக்குறைகளைப் புலம்பித்தள்ளுகையில் காதுகொடுத்துக்கேட்க ஒருவர் *இருக்கும் வரை மட்டுமே...*_
_*வாழ்வு வசந்தமானது*_
With Regards.,
Dr Anthony Rahul Golden S
M.Com., M.Phil., NET., Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A., PGDBA.,
Asst. Professor of Commerce., Loyola College (Autonomous), Chennai - 34
Mobile No- 91+9176313545
https://yesrahul.blogspot.com/
https://orcid.org/0000-0001-8071-4801
https://www.researchgate.net/profile/Anthony-Golden-S
https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ
No comments:
Post a Comment