#பனங்கிழங்கு காலம் இது... பொங்கலுக்கு எப்போதுமே அதிகமான அளவில் பனங்கிழங்கு அறுவடை நடைபெறும்...#தென்மாவட்ட ங்களில் அதிக மழையால் வரத்து குறைந்து விற்பனையாகிறது...
நல்ல உருண்டு திரண்ட நீளமான பனங்கிழங்கு விளைச்சல் காலம் மூன்று மாதமாகும்... பனங்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயி பனைமர உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கின்றார்... அவர்களிடம் இருந்து பனைசார்ந்த அறிவை நாம் நிறைய வளர்த்து கொள்ள வேண்டும்..
இதற்கு இணையான ஊட்டசத்து உணவு உலகில் வேறு எங்குமே இல்லை... பனங்கிழங்கை சிறுசிறு துண்டுகளாக்கி காய வைத்து(#ஒடியல்) மாவாக திரித்து விதவிதமாக ஆண்டு முழுவதும் உண்டு மகிழலாம்...
நொங்கை தவிர்த்து பனம்பழமாக காத்திருந்து பனங்கிழங்கை உண்டு மகிழலாம்... பனை நமக்கு தந்த கொடை அது .. எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் பனையை பயன்படுத்துகின்றீர்களோ அந்த அளவு பனை உங்களுக்கு ரெட்டிப்பான நன்மைகளை தரவல்லது... பனையை பயன்படுத்துவோம் வாழ்வில் வளம்பெறுவோம்..
அனைத்து #பனைஉணவு பொருட்களும்
மிகவும் சத்து நிறைந்தவை . . .#பனங்கிழங்கு
#பனைவிவசாயம் #பனை மரத்தை பாதுகாப்போம்
No comments:
Post a Comment