Labels

Saturday, May 18, 2024

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா் பி.சுவாமிநாதன் தகவல்.*

*தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா் பி.சுவாமிநாதன் தகவல்.* இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்களாக பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விரிவான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தின் https://thoothukudi.dcourts.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து வரும் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ அல்லது தலைவா், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், தூத்துக்குடி - 628 003 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ அனுப்பலாம். தூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 12 நபர்களும், கோவில்பட்டி வடட் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 7 நபர்களும், திருச்செந்தூர் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 7 நபர்களும், ஸ்ரீவைகுண்டம் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 7 நபர்களும், சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 7 நபர்களும், விளாத்திகுளம் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 5 நபர்களும் மற்றும் ஓட்டப்பிடாரம் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் 5 நபர்களும் தேர்ந்தெடுக்கப்பட் உள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த 50 நபா்கள் தோ்வு செய்யப்படுவா். தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தொண்டுள்ளம் கொண்ட நபா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாற்ற விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். மேற்படி சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களுக்கான கடமை சேவை மட்டுமே ஆகும். இது உத்தியோகம் இல்லை, தற்காலிகமானது மற்றும் அதற்கு ஊதியம் எதுவும் இல்லை என்பதையும் சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டுமே அளிக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. நேர்காணல் தேதி மற்றும் இடம் பின்னர் விணணப்பதாரருக்கு இணையதள அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்படும். மற்ற விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தையோ அல்லது அருகில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழுவையோ அணுகவும்.

No comments:

Post a Comment