Labels

Tuesday, September 14, 2021

*கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்;*

*கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்;* கால்நடை மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து, தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு, பி.டெக்., உணவு, கோழியின, பால்வள ஆகிய தொழில்நுட்பட பட்ட படிப்புகளுக்கு, தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அக்., 8 மாலை 6:00 மணி வரை, https://tanuvas.ac.in, www2.tanuvas.ac.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்; நேரடி விண்ணப்பம் கிடையாது. அயல்நாடு வாழ் இந்தியர், அவர்களின் குழந்தை கள், அயல்நாடு வாழ் இந்தியர்களின் நிதி ஆதரவு பெற்றோர் மற்றும் அயல்நாட்டினரும் விண்ணப்பிக்கலாம். தகவல், தொகுப்பேடு, சேர்க்கை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை மற்றும் இதர விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. * தமிழக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின் கீழ், 10 கால்நடை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு இளநிலை படிப்புக்கு, 480 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டில், 15 சதவீதமான, 72 இடங்கள் போக, மீதமுள்ள, 408 இடங்களுக்கு மாநில ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது * பி.டெக்., உணவு தொழில் நுட்ப படிப்புக்கு, 40 இடங்கள் உள்ளன. இதில், ஆறு இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு போக, 34 இடங்கள் மாநில ஒதுக்கீட்டில் உள்ளன * பி.டெக்., கோழியின தொழில்நுட்ப படிப்பில், 40 இடங்கள்; பி.டெக்., பால்வள தொழில்நுட்ப படிப்புக்கு, 20 இடங்களுக்கு, மாநில ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment