Labels

Wednesday, July 08, 2020

குப்பைமேனி.(Acalypha indica).

குப்பைமேனி.(Acalypha indica).
கரம்புகளில்,  சாலைகளில் ஈரமான   இடம்பார்த்து
முளைத்திருக்கும்
பச்சிலைச்செடி!
ஒரு அடி  வரை   உயரம் வளரும்  தண்டுச்செடி!
அரி மஞ்சரி, பூனை வணங்கி, குப்பி,முள்ளிக்கீரை,சங்கர புஷ்பி,மார்ஜாலமோகினி
எனப் பலப் பெயரில் பரிணமிக்கும் ஒருபொருள் குறிக்கும் பலசொல் கிளவி!இந்தியா, ஆப்பிரிக்கா,ஏமன் என எங்கும் கிடக்கும் சின்னச் செடி! அகத்தியர் ‘குணவாகடம்’நூலில்
அமைந்த கோபுரமேனி இலைச்செடி! தேரையரின் ‘குணபாடம்’ நூல்
உன் பயனைத் தெளிவாய் எடுத்துப் பேசும்.
இந்திய சித்த மருத்துவத்தின் சிறந்த மூலிகை நீ!வயிற்றுக் கிருமி,படுக்கைப் புண், சேற்றுப்புண், கோழைச்சளி இருமல்,மூல நோய்கள் மலச்சிக்கல், ஆஸ்துமா, தோல் வியாதிகள்,சொறி சிரங்கு இவைகளைப்  போக்கும் மூலிகைத்தாவரம்!
தோல் நோய்க்குத் தைலம் தருவாய்!
காற்றுப் பிரிய கஷாயம் தருவாய்!
வாய் சுவைக்குக் கீரை தருவாய்!
தோல் நோய்க்குத் தைலம் தருவாய்!மேனியை அழகாக்கும் ஞானத்தழையே!
பார்வைக்குச் சுகம் சேர்க்கும் பசுமை மணியே! நீவிர்
கனிகள்,சுவைகள்
உள்ளவரை
தளிர்த்துச் செழித்து  வாழியவே!
இளங்காலை வணக்கம்,
-பேரா.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரீஸ் கலைக்கல்லூரி
வடலூர்.
நெய்வேலி.

No comments:

Post a Comment